நீங்கள் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் குடிபுகுந்திருந்தால் அல்லது நீங்கள் ஆங்கிலம் பேசுவதில்லை என்றால், நீங்கள் எங்களுடன் தொடர்புகொள்ள உதவுவதற்கு நாங்கள் பல்வேறு மொழிச் சேவைகளை வழங்குகின்றோம்.
நாங்கள் எல்லா வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக மொழிபெயர்த்துரைப்புச் சேவையை வழங்குகின்றோம்.
நீங்கள் எங்களுடைய அலுவலகங்களுக்கு வருகை தரும் போது, நீங்கள் என்ன மொழி பேசுகிறீர்கள் என்பதை எங்களுடைய வரவேற்பாளரிடம் கூறி, உரைபெயர்ப்பாளர் தேவை என்று அவரிடம் கூறவும். நீங்கள் எங்களுடன் தகவல்தொடர்புகொள்ள உதவுவதற்கு பன்மொழி பேசும் ஊழியர் எங்களிடம் உள்ளாரா என்று நாங்கள் சரிபார்ப்போம் அல்லது மொழிபெயர்த்துரைப்புச் சேவையை தொலைபேசியில் அழைப்போம்.
ஒரு உரைபெயர்ப்பாளர் உங்களுடன் இருப்பதற்கு நாங்கள் ஏற்பாடு செய்துதர வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், தயவுசெய்து முதலில் எங்களுக்கு தொலைபேசியில் தெரிவிக்கவும்.
பன்மொழி பேசும் மன்ற உறுப்பினர்கள் நீங்கள் விரும்பும் மொழியில் நீங்கள் எங்களுடன் தகவல்தொடர்புகொள்ள உதவுவதற்குப் பயற்சி பெற்றவர்கள். அவர்களால் தொலைபேசி வாயிலாகவோ அல்லது எங்கள் அலுவலகங்களில் நேரடியாகவோ உங்களுக்கு உதவ முடியும்.
இத்தகைய மொழி உதவியாளர்கள், கலாசார ரீதியாகவும் மொழிரீதியாகவும் வேறுபட்டிருக்கும் (CALD) சமூகத்திலிருக்கும் எங்களுடைய உள்ளூர் குடியிருப்பாளர்களுடன் முறையான தகவல்தொடர்பை எளிதாக்குகிறார்கள்.
நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தினரோ ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பினால், எங்களுடைய Neighbourhood houses –இல் சில அதற்கான வகுப்புகளையும் குறும் பயிற்சி வகுப்புகளையும் வழங்குகின்றன மேலும் விவரங்களுக்கு, Neighbourhood houses மற்றும் சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி நிலையங்களைப் பார்க்கவும்.
பின்வருவன உள்ளிட்ட மன்றச் சேவைகள் குறித்து முன்னரே பதிவுசெய்யப்பட்ட தகவல்களைக் கேட்பதற்கு, குடியிருப்பாளர்கள் எங்களின் பன்மொழித் தொலைப்பேசி எண்களை அழைக்கலாம்:
நீங்கள் ஒரு தமிழ் உரைபெயர்ப்பாளருடன் பேச விரும்பினால், 9679 9879 என்ற எண்ணை அழைக்கவும்.